தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணியிலிருந்து 144 தடை உத்தரவு அமலுக்குவருகிறது. இதனால் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் இயங்காது. இந்தச் சூழலில் கள்ளச்சந்தை மதுவுக்கு நல்லவிலை கிடைக்குமென நினைத்த இரண்டு இளைஞர்கள், காரைக்காலிலிருந்து மதுபாட்டில்களைக் கடத்திவந்துள்ளனர்.
அதிவேகமாக வந்ததால், செல்லூர் அருகே எதிரே வந்த ஆட்டோவில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ஆவராணிபுதுச்சேரி பகுதியைச் சேர்ந்த உலகநாதன், சந்தோஷ் ஆகிய இருவர் படுகாயமடைந்தனர்.
மதுபாட்டிகளைச் சேகரிக்கும் மதுப்பிரியர்கள் அந்தச் சமயத்தில் அப்பகுதியிலிருந்த மதுப்பிரியர்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்காமல், சிதறிய மதுபாட்டில்களை எடுப்பதில் ஆர்வம் செலுத்தியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வெளிப்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு - கர்நாடக எல்லைப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தம்