நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த வாழக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட சூரட்சிவேலி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட கூலி விவசாய தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்தச் சூழலில் இப்பகுதி மக்களுக்கு சுடுகாட்டு கட்டடமும், சுடுகாட்டிக்கு செல்ல சாலை வசதியும் பல ஆண்டுகளாக இல்லை. இதனால், இறந்தவர்களின் உடலை வயல்வெளியில் தூக்கிச்செல்லும் அவலம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இறந்ததை அடுத்து அவரின் உடலை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் பயிர்கள் சேதமடையும் வண்ணம் தூக்கிச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.