தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை தொகுதியில் வாக்குச் சேகரித்த அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர்! - Mayiladuthurai Election news

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தொகுதி, அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமி இருசக்கர வாகனத்தில் சென்றும், நடந்துசென்றும் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச் சேகரித்தார்.

மயிலாடுதுறை தொகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர்
மயிலாடுதுறை தொகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர்

By

Published : Apr 3, 2021, 6:28 AM IST

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சி, பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமி கிராமப் பகுதிகளில் திறந்த வாகனத்தில், மயிலாடுதுறை தொகுதிக்குள்பட்ட கொண்டல், ஐவநல்லூர், கொற்கை உள்ளிட்ட ஊராட்சிகளில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை தொகுதியில் வாக்குச் சேகரித்த அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர்

கொற்கை ஊராட்சியில் உள்ள ஸ்ரீசெல்வ மாரியம்மன் ஆலயத்தில் தரிசனம்செய்து, இருசக்கர வாகனத்தில் சென்றும், நடந்துசென்றும் கிராமப் பெண்களிடம் வாக்குச் சேகரித்தார்.

அப்போது மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பெண்களிடம் கூறும்போது,

'உங்கள் பகுதிக்கு பள்ளிக்கூடம், மருத்துவமனை, சுடுகாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம், சாலை வசதி செய்துதரப்படும்' என்று கூறியும், கூட்டணிக் கட்சி பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமிக்கு ஆதரவு திரட்டினார். இதில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினர்.

இதையும் படிங்க: 'மயிலாடுதுறை வாக்கு எண்ணும் மையங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்!'

ABOUT THE AUTHOR

...view details