தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மழை வேண்டி எல்லா மதத்தினரும் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டுவருகின்றனர்.
திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை! - Prayer for Rain
நாகை: மயிலாடுதுறை அருகே பிரசித்திப் பெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் மழை வேண்டி வருண ஜெபம், சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
அந்த வகையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரியில் உள்ள பிரசித்திப் பெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் மழை வேண்டி வருண ஜெபம், சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, கோயில் நந்தி எம்பெருமான் சிலையில் கழுத்தளவு நீர் நிரப்பப்பட்டது. மேலும் சிவாச்சாரியார்கள் இடுப்பளவு நீரில் நின்று வருண ஜெபம் செய்து, பின்னர் யாகம் வளர்த்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் மயிலாடுதுறை சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.