தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 2, 2020, 10:11 AM IST

ETV Bharat / state

ஆடிப்பெருக்கு: ஊரடங்கு உத்தரவை மீறி காவிரி துலாக்கட்டத்தில் குவிந்த மக்கள்

மயிலாடுதுறையில் தளர்வில்லா பொது முடக்கத்தை மீறி காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில்
மயிலாடுதுறை துலாக்கட்டத்தில்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலாக்கட்டத்தில் நீராடினால், அவர்கள் ஆண்டு முழுவதும் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் இங்கு நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, காவிரியில் நீரோட்டம் அதிகரித்துள்ளதால், ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடினர்.

பொது முடக்கத்தை மீறி காவிரி துலாக்கட்டத்தில் குவிந்த மக்கள், அம்மனுக்கு வழிபாடு நடத்தி, புனித நீராடி ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினர். மேலும், புதுமணத் தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெற காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி புனித நீராடினர்.

இதையும் படிங்க:தொழில் நிறுவனங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details