மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்குமிடம் சங்க முக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி சங்கமத்தில் பொதுமக்கள் புனித நீராடுவது வழக்கம். ஆடி மற்றும் தை அமாவாசை, மஹாலயா அமாவாசை ஆகிய தினத்தன்று காவிரி சங்கமத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
அதன்படி ஆடி அமாவாசையான இன்று (ஆகஸ்ட் 16) பூம்புகார் காவிரி சங்கமத்தில் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரகணக்கான பொதுமக்கள் பூம்புகார் காவிரி சங்கமத்தில் குவிந்து உள்ளனர். முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து காய்கறிகள், கீரை வகைகள், பச்சரிசி, எள் ஆகியவை வைத்து தர்ப்பணம் கொடுத்து காவிரி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இதையும் படிங்க:"ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாரணியர் தலைமையகம் புதுப்பிக்கப்படும்" - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தகவல்!