தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரூப்-4 தேர்வு - மாற்றுத் திறனாளி மாணவர் ஆர்வமுடன் பங்கேற்பு - மயிலாடுதுறை மாவட்டம்

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு இன்று (ஜூலை 24) நடைபெற்று வரும் நிலையில், மயிலாடுதுறையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வு எழுதி வருகிறார்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்
பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்

By

Published : Jul 24, 2022, 12:43 PM IST

மயிலாடுதுறை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வு மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட தாலுக்காக்களில் 80 மையங்களில் நடைபெற்று வருகிறது.

இதில் 23 ஆயிரத்து 951 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்காக ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு துணை ஆட்சியர் நிலையில் தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு 80 தலைமை கண்காணிப்பாளர்கள், 7 பறக்கும்படை அலுவலர்கள், 16 சுற்றுக்குழு அலுவலர்கள், 80 ஆய்வு அலுவலர்கள், 84 வீடியோ கிராபர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்

தேர்வில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளத்தில் தேர்வு எழுத வசதி ஒவ்வொரு தேர்வு கூடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த நேரத்தில் குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் ஓஎம்ஆர் சீட்டுகள் அந்தந்த மையங்களில் வழங்கப்பட்டு மாணவர்கள், இளைஞர்கள் எவ்வித சிரமமின்றி ஆர்வமுடன் தேர்வு எழுதி வருகின்றனர். மயிலாடுதுறை புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியில் வரலாறு முதுநிலை பட்டதாரி மாற்றுத்திறனாளி முத்து மாணிக்கம் என்ற தேர்வர் குரூப் 4 தேர்வில் உதவி எழுத்தர் மூலம் ஆர்வமுடன் தேர்வு எழுதி வருகிறார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details