மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை என்ற 53 வயதுடைய யானை கடந்த 50 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை மற்றும் கோயில் பசு, காளைகளுக்கு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் தினத்தன்று சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
மாயூரநாதர் கோயிலில் யானை, பசு, காளைகளுக்கு சிறப்பு அபிஷேகம்
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை யானை, பசு, காளைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு 53 வயதுடைய அபயாம்பிகை யானைக்கு சிறப்பு அபிஷேகம்
அந்த வகையில் மாட்டுபொங்கலை முன்னிட்டு நேற்று (ஜனவரி 16) கோயில் பிரகாரத்தில் யானை, பசு, காளைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் அர்ச்சகர்கள் பால், பன்னீர், மஞ்சள், இளநீர், திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டினர். அதன்பின் யானை, பசுக்கள் கோயில் பிரகாரத்தை சுற்றிவர செய்யப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு யானையிடம் ஆசி பெற்றனர்.
இதையும் படிங்க:மூன்று தலைமுறைகளாக தை 2-ம் தேதி பொங்கல் கொண்டாடும் கிராம மக்கள்