நாகப்பட்டினம்:மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் புரெவி புயல் காரணமாக கோயிலின் உள்ளே வெள்ளநீர் தேங்கியது. இதற்கு காரணமான வடிகாலை நேற்று (டிசம்பர் 19) கோயில் நிர்வாகத்தினர் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனைக்கவனிக்காமல் கோயில் நிர்வாகத்தினர் மூடிச்சென்றனர்.
இதையடுத்து, அதிகளவிலான குடிநீர் வெளியேறியுள்ளது. இது குறித்து, அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வந்து அதனை சரிசெய்த நகராட்சி அலுவலர்கள், குழியை மூடாமல் அலட்சியமாக விட்டுச் சென்றனர். இந்நிலையில், நேற்றிரவு அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற செட்டிக்குளத்தைச் சேர்ந்த பாலு என்பவர் அந்தக்குழிக்குள் இருசக்கர வாகனத்துடன் தலைகுப்புற விழுந்தார்.