நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் கங்களாஞ்சேரி பட்டாணி தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (60). இவர், சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயா (45).
இந்நிலையில், பிப். 7ஆம் தேதி இரவு 9 மணியளவில் தியாகராஜனுக்கும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அழகர் (45) என்பவருக்கும் இடையே வேலி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அழகர் அருகிலிருந்த கட்டையை எடுத்து தியாகராஜன், அவரது மனைவி ஆகியோரை தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த இருவரையும் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.