தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

136 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதிகளுக்குள்பட்ட 136 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

collector
collector

By

Published : Feb 2, 2021, 10:27 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்திற்குள்பட்ட மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், பைக், செயற்கைக்கால், காதுகேட்கும் கருவி, தையல் இயந்திரம், ஸ்மார்ட்போன், சக்கரநாற்காலி போன்ற உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

136 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதிக்குள்பட்ட 136 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 23 லட்சத்து 95 ஆயிரத்து 846 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!

ABOUT THE AUTHOR

...view details