தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடரும் மழையால் 70 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் சேதம் - மழையால் நெற்பயிர்கள் அழுகி சேதமாகியது

மயிலாடுதுறை: ஒரு வாரத்திற்கு மேலாக மாவட்டத்தில் மழை தொடர்வதால் 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி நெற்பயிர்கள் அழுகி சேதமாகின.

தொடரும் மழையால் 70 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் சேதம்
தொடரும் மழையால் 70 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் சேதம்

By

Published : Jan 16, 2021, 12:16 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுகா பகுதிகளில் 1 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா தாளடி சாகுபடி செய்துள்ளனர். பயிர்கள் தண்டு உருண்ட நேரத்தில் நிவர் புயல், புரெவி புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.

செப்டம்பர் மாதத்தில் நடவு செய்யப்பட்ட பயிர்கள் தற்போது கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 1 வாரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் அறுவடை செய்ய வேண்டிய பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. கதிர்கள் முற்றிய பயிர்கள் தண்ணீரில் முளைத்து சேதமடைந்துள்ளது. கதிர் முற்றாமல் இருக்கும் நெல்மணிகள் அழுகி சேதமடைந்துள்ளன.

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் 1000 ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் அழுகி சேதமடைந்துள்ளன. இதேபோல் சேத்தூர், பெரம்பூர், உக்கடை, விளாகம், பாலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிய வழியின்றி 3 ஆயிரம் ஏக்கரில் தண்ணீரில் கிடக்கும் சம்பா தாளடி பயிர்கள் அழுகியுள்ளன.

தொடரும் மழையால் 70 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் சேதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் மழைநீர் வடிந்தாலும் நெல் மகசூல் தராது என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் பயிர் காப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

பொங்கலை புறக்கணித்த நன்னிலம் விவசாயிகள்

ABOUT THE AUTHOR

...view details