தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடல் அலையில் சிக்கிய 6 பேர் மீட்பு: 2 பேர் கவலைக்கிடம்! - Karaikal Beach

நாகப்பட்டினம்: காரைக்கால் கடலில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கடல் அலையில் சிக்கிய நிலையில், அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

காரைக்காலில் கடல் அலையில் சிக்கிய 6 பேர் மீட்பு  கடல் அலையில் சிக்கிய 6 பேர் மீட்பு  6 rescued from sea wave in Karaikal  6 rescued from sea wave  கடல் அலை  காரைக்கால் கடற்கரை  Karaikal Beach  sea wave
6 rescued from sea wave in Karaikal

By

Published : Dec 28, 2020, 8:11 AM IST

Updated : Dec 28, 2020, 11:22 AM IST

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள கடற்கரையில் விடுமுறை நாள்களில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கும்பகோணம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த சமல் பாட்ஷா என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை (டிச. 27) காரைக்காலில் உள்ள கடற்கரைக்குச் சுற்றுலா வந்துள்ளார்.

அலையில் சிக்கிய குடும்பத்தினர்

இதையடுத்து, குடும்பத்தினர் அனைவரும் கடற்கரையில் குளித்துள்ளனர். அப்போது, அவரது மனைவி பாத்திமா ஜான், அவருடைய மகன், மகள்கள் ஐனாப்பர் ஜான், சமீனாஜாகன், அகமது சபின், சசின்பானு, உறவினர் பெண் ரசிம்மா பானு உள்பட 6 பேர் கடல் அலையில் சிக்கி உயிருக்குப் போராடியுள்ளனர்.

அனைவரும் மீட்பு

இதைக் கண்ட அங்கிருந்த இளைஞர்கள் அவர்கள் அனைவரையும் மீட்டு அரசு மருத்துமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதில், அவருடைய மனைவி பாத்திமா ஜான், உறவினர் பெண் ரசிம்மா பானு இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:ஊருக்குள் புகுந்த கடல் அலை; சுவர் இடிந்து முதியவர் படுகாயம்

Last Updated : Dec 28, 2020, 11:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details