நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கந்தமங்கலம் என்ற கிராமத்தில், அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் குத்தாலம் தெற்கு ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக சரக்கு வாகனத்தில் கட்சித் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இக்கூட்டம் முடிந்து அதே வாகனத்தில் 20 பேர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அனந்தநல்லூர் என்ற இடத்தில் வாகனத்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் நிலை தடுமாறி அருகில் இருந்த வாய்க்காலில் அந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வாகனத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.