தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

280 கிலோ கஞ்சா கடத்தல்: பிரபல யூ-ட்யூபர் வீட்டில் சோதனை - கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற யூ-ட்யூபர், அவரது நண்பர்களது வீடுகளில் சுங்கத் துறை அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

வீட்டில் சோதனை
வீட்டில் சோதனை

By

Published : Sep 30, 2021, 12:31 PM IST

நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து, இலங்கைக்கு ஒரு கும்பல் படகு மூலம் கடல் வழியாகக் கஞ்சா கடத்துவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சுங்கத் துறை அலுவலர்கள் சென்றனர்.

இதனைத் தெரிந்துகொண்ட அக்கடத்தல் கும்பல், கஞ்சா மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர். அதனை ஆய்வு செய்தபோது 280 கிலோ எடையுள்ள கஞ்சாவின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு, நான்கு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்து சுங்கத் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கஞ்சா கடத்தியது 'பிரபல நாகை மீனவன்' என்ற யூ-ட்யூப் சேனல் நடத்திய கீச்சாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த குணசீலன், அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சுங்கத் துறை அலுவலர்களான குணசீலன், சதீஷ், சிவச்சந்திரன், குணசீலன் ஆகியோரது வீடுகளில் இன்று (செப். 30) நான்கு மணி நேரம் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து இவர்களுக்குச் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலோடு தொடர்பு இருக்கிறதா என விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். யூ-டியூப் நடத்திவருபவர்கள் கஞ்சா கடத்திய விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:விமான நிலையத்தில் தொடரும் கடத்தல்கள்

ABOUT THE AUTHOR

...view details