மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஆங்காங்கே கிடங்குகளில் அடுக்கி வைத்திருந்தனர். இந்த நெல் மூட்டைகளை அரவை மில்லுக்கு அனுப்பவது வாடிக்கை. அங்கிருந்து அரிசியாக்கப்பட்டு வந்த பின்னர் ரேஷன் கடைகளில் விநியோகத்திற்காக வழங்குவர்.
2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்காக ஓசூருக்கு அனுப்பி வைப்பு! - மயிலாடுதுறை சமீபத்திய செய்திகள்
மயிலாடுதுறை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர் சுமார் 2 ஆயிரம் டன் எடையுடைய நெல் மூட்டைகளை அரவைக்காக சரக்கு ரயில் மூலம் ஓசூருக்கு அனுப்பி வைத்தனர்.
நெல் மூட்டைகள்
இந்நிலையில், மயிலாடுதுறை, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் தாலுக்காக்களில் கொள்முதல் செய்யப்பட்டு, கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 50,000 நெல் மூட்டைகளை (2000 டன்) லாரிகள் மூலம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு ஏற்றும் பிரிவுக்கு கொண்டு சரக்கு ரயிலில் 52 வேகன்களில் (பெட்டி) ஏற்றினர். இந்த நெல் மூட்டைகள் ஓசூரில் உள்ள அரவை ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் கண்காணித்தனர்.