நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே மணக்குடியில் பறக்கும் படை தாசில்தார் சண்முகம் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மயிலாடுதுறை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், அதில் ரூ. 1.17லட்சம் ரொக்கப்பணம், உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
மயிலாடுதுறையில் ஒரு லட்சம் பறிமுதல்; தேர்தல் அதிகாரிகள் கிடுக்குப்பிடி! - நாகை
நாகை: மயிலாடுதுறையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.17 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட பணம்
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து மயிலாடுதுறை தாசில்தார், அலுவலகம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், கொற்கை பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் மயிலாடுதுறையில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்திற்காக பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.