தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாரிதாஸ் கைது: புதூர் காவல் நிலையம் முற்றுகை

பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வு என ட்விட்டரில் பதிவிட்ட பிரபல யூ-ட்யூபர் மாரிதாஸ் மதுரையில் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து புதூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் நிலையம் முற்றுகை
காவல் நிலையம் முற்றுகை

By

Published : Dec 9, 2021, 7:19 PM IST

மதுரை: குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தனர். இது குறித்து மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "திக, திமுக ஆதரவாளர்கள் கேலி செய்யும்விதமாகப் பதிவிடுகின்றனர். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை" எனப் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து அவரை காவல் துறையினர் கைதுசெய்யப்போவதாகக் கிடைத்த தகவலை அடுத்து மாரிதாஸ் வீட்டில் பாஜக நிர்வாகிகள் குவிந்தனர். கைது செய்யவந்த காவல் துறையினரிடம் அவர்கள் முறையிட்டனர். மேலும் அவரது கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாரிதாஸ் கைதுசெய்யப்பட்டார்.

காவல் நிலையம் முற்றுகை

பின்னர் காவல் துறையினர் அவரை புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மாரிதாஸ் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட பாஜகதலைவர் மருத்துவர் சரவணன் தலைமையில் ஏராளமானோர் புதூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் காவல் துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையும் படிங்க: திமுகவை விமர்சித்து ட்விட்டர் பதிவு: யூ-ட்யூபர் மாரிதாஸ் கைது

ABOUT THE AUTHOR

...view details