மதுரை இஸ்மாயில் புரத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரின் மகன் சரவணக்குமார், இவர் மே 20ஆம் தேதி நள்ளிரவில் நண்பர்களுடன் தங்குவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மே 21ஆம் தேதி அதிகாலை தெப்பக்குளம் அருகே உள்ள பாபு நகர் ஐந்தாவது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் மேலிருந்து விழுந்து மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
மதுரையில் இளைஞர் மர்மமான முறையில் சாவு - death
மதுரை: இஸ்மாயில் புரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மாடியிலிருந்து விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலி
இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு இராசசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இளைஞர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரும் கொலை செய்து மேலிருந்து தள்ளி விட்டார்களா? என்ற கோணத்தில் தெப்பக்குளம் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.