தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணம் நடைபெறுவதால் கைதிக்கு உடனடி ஜாமீன்

மதுரை: நீதிமன்றக் காவலில் உள்ள கைதிக்கு திருமணம் நடைபெறவுள்ளதால் உடனடியாக ஜாமீன் வழங்க உத்தவிட்டிருக்கிறார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி.

திருமணம் நடைபெறுவதால் கைதிக்கு உடனடி ஜாமீன்
திருமணம் நடைபெறுவதால் கைதிக்கு உடனடி ஜாமீன்

By

Published : Jan 29, 2020, 10:45 PM IST

மனுதாரர் வெங்கடேஷ் மதுபாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக கைதாகி, கடந்த 24ஆம் தேதி முதல் நீதிமன்ற காவலில் கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜனவரி 30ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. அதனால் தனக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், அவரை திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணிடம் பேசியதில், அவருக்கு சம்மதம் என தெரியவந்துள்ளது. திருமணம் என்பது மனுதாரர் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம். எனவே நாளை திருமணம் நடைபெறவுள்ளதால் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி உத்தரவிடப்படுகிறது என்றார்.

மாலை 6 மணிக்கு மேல் ஜாமீனில் யாரும் வெளியில் விடப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிலிருந்து மனுதாரருக்கு விலக்கு அளித்து, அவரை ஜாமீனில் வெளியில் விட வேண்டும் என்று கும்பகோணம் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details