தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை - கொலை

மதுரை: புதூர் பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

murder

By

Published : Jun 19, 2019, 10:34 AM IST

மதுரை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் மீது காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், ஆறுமுகம் புதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆறுமுகத்தை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர்.

இதில் ஆறுமுகம் நிகழ்விடத்திலேயே பலியானர். தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை நிகழ்விடத்திலேயே கைது செய்தனர். ஆறுமுகத்தின் சடலத்தை ஆய்வுக்காக அனுப்பி வைத்த அவர்கள், தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பதற்றமும் நிலவியது.

ABOUT THE AUTHOR

...view details