தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் வழக்கறிஞரிடம் பாலியல் அத்துமீறல் - பாஜக பிரமுகர் மீது புகார் - மதுரையில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் அத்துமீறல்

மதுரையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்து மிரட்டியதாக சிவகங்கையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

பாலியல் அத்துமீறல்  பாஜக பிரமுகர் மீது பாலியல் புகார்  பாலியல் புகார்  பாலியல் வண்புனர்வு  sexual harassment  women lawyer sexually harassment by bjp member  bjp member  madurai news  madurai latest news  madurai women lawyer sexually harassment by bjp member  madurai sivangai women lawyer sexually harassment by bjp member  பெண் வழக்கறிஞரிடம் பாலியல் அத்துமீறல்  பெண் வழக்கறிஞர்  மதுரையில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் அத்துமீறல்  மதுரை சிவகங்கையில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் அத்துமீறல்
பாலியல் புகார்

By

Published : Aug 9, 2021, 6:17 AM IST

மதுரை: சிவகங்கை நகர் பகுதியைச் சேர்ந்த நான்காம் ஆண்டு சட்ட கல்லூரி மாணவி தற்போது வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர், தான் பாஜகவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, "என் தந்தை கூலி வேலை செய்துவரும் நிலையில், நான் நான்காம் ஆண்டு சட்டம் பயின்று வருகிறேன். எனக்கு ஒரு தம்பியும், ஒரு தங்கையும் உள்ள நிலையில் உதவி வழக்கறிஞராகவும் பணி செய்கிறேன்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து

என்னுடைய வேலை நிமித்தமாக சிவகங்கை காமராஜர் காலனியில் உள்ள பாரத் லால் என்பவரது போட்டோ ஸ்டுடியோவிற்கு சென்றேன். அப்போது பாரத் லாலுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.

புகைபடம் எடுத்து மிரட்டல்...

இந்நிலையில் ஒருநாள் அவர் கொடுத்த குளிர்பானத்தை குடித்தபோது தலை சுற்றல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயக்க நிலை அடைந்தேன். அப்போது என்னை பாலியல் வன்புணர்வு செய்து அதனை புகைப்படம் பிடித்து வைத்துள்ளார்.

இதனால் பாரத் லாலுடன் இருந்த நட்பை துண்டித்துக்கொண்டேன். இந்நிலையில் சில நாட்கள் கழித்து அந்த புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்து இதை வெளியே பகிர்ந்துவிடுவேன் என மிரட்டி தொடர்ந்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.

பாலியல் வழக்கு

தற்போது நான் 63 நாட்கள் கர்ப்பமாக உள்ளேன். இது குறித்து பாரத் லாலிடம் கேட்டபோது என்னையும், என் தாயையும் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். எனவே வேறு வழியில்லாமல் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது..

பாஜகாவில் முக்கிய பொருப்பு

குற்றஞ்சாட்டப்பட்ட பாரத் லால் சிவகங்கை நகர் பாஜகவின் முக்கிய பொறுப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இவர் மீது பாலியல் தொடர்பான வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாளையங்கோட்டையில் முகம் சிதைந்த நிலையில் இளைஞரின் உடல் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details