சென்னையிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இன்று காலை மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தபோது.
ரயிலில் வந்த மதுரை காக்கதோப்பு பகுதியை சேர்ந்த 49 வயதுதக்க விஜயபூர்ணிமா என்றப் பெண் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாக ரயில் நிற்பதற்கு முன்பாகவே கீழிறங்க முயன்றுள்ளார் அப்போது தவறி கீழே விழுந்த அவர் நடைமேடைக்கும் ரயிலுக்கு இடையே பரிதாபமாக சிக்கி கொண்டார்.
உடனடியாக சக பயணிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு ரயில்வே போலிசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகளின் உதவியோடு 1 மணி நேர போராட்டத்திற்கு பின் பக்கவாட்டு சுவர் உடைக்கபட்டு விஜயபூர்ணிமா காயங்களுடன் மீட்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரயிலுக்கடியில் சிக்கி கொண்ட பெண்! ஒரு மணி நேரம் மீட்கும் பணி காரணமாக இன்று காலை மதுரை வரவேண்டிய ஹவுரா எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி பாண்டியன் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தடைந்தன.