தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தினக்கூலி பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்திவிட்டால் அந்த வேலையை யார் பார்ப்பது? - நீதிபதி சரமாரி கேள்வி!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த தினக்கூலி பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்திவிட்டால், அந்த வேலையை யார் பார்ப்பது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினக்கூலி பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டால் அந்த வேலையை யார் பார்ப்பது? - நீதிபதி சரமாரி கேள்வி!
தினக்கூலி பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டால் அந்த வேலையை யார் பார்ப்பது? - நீதிபதி சரமாரி கேள்வி!

By

Published : May 27, 2022, 10:02 PM IST

மதுரை வடபழஞ்சி பகுதியைச்சேர்ந்த சேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "நான் 1991ஆம் ஆண்டு முதல் தினக்கூலியாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தேன். தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் சக ஊழியர்கள், பணியை முறைப்படுத்த பல்கலைக்கழகத்திடம் கோரினார்.

ஆனால், அதனை பல்கலைக்கழகம் ஏற்கவில்லை. நான் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் தினக்கூலியாக தோட்டவேலை, நூலகத்தில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருகிறேன். கடந்த வாரத்தில் இருந்து என்னை வேலைக்கு வரவேண்டாம் என வாய்மொழியாக பல்கலைக்கழக தரப்பில் கூறியுள்ளனர்.

இதனால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தினசரி கூலியாகப் பணிபுரிய என்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன் இன்று (மே27) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘இது போல் 130 தினக்கூலி பணியாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என கூறியுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், காமராஜர் பல்கலைக்கழக தரப்பில், ‘தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க தேவையான நிதி ஆதாரங்கள் இல்லை’ எனக் கூறி வாதிட்டனர்.

இதனையடுத்து ‘மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தினக்கூலியாக 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியில் இருந்தவரை வேலைய விட்டு நிறுத்தினால், அவர்களின் நிலைமை என்னவாகும்? அவர்கள் குடும்பத்தின் நிலை என்னவாகும்? தினக்கூலி பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டால், அந்த வேலையை யார் பார்ப்பது?

எனவே, மனுதாரரை மறு உத்தரவு வரும் வரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். மேலும், இது குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:'நான் சாதி பார்த்து இடமாற்றம் செய்யவில்லை' - தேசிய ஃபேஷன் டெக் வளாக இயக்குநர் மனு!

ABOUT THE AUTHOR

...view details