மதுரை மாநகர் தெற்கு வாசல் பகுதியில் உள்ள நகைக்கடை பட்டறையில் சிலர் திமிங்கல எச்சம் பதுக்கி வைத்திருப்பதாக வன உயிரின சரக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குச்சென்ற வனத்துறையினர், நகைப்பட்டறை நடத்தி வந்த ராஜாராம், சுந்தரபாண்டி மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த கவி ஆகிய 3 பேரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து சுமார் 11 கிலோ திமிங்கல எச்சங்களைப் பறிமுதல் செய்தனர்.