மதுரை: சென்னை தாம்பரம் மற்றும் கேரள மாநிலம் எர்ணாகுளம் ரயில் நிலையங்களுக்கிடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, எர்ணாகுளம் - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06068), நவம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை, திங்கட்கிழமைகளில் மதியம் 1.10 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.00 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என்றும், மறு மார்க்கத்தில் தாம்பரம் - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06067), நவம்பர் 29ஆம் முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை, செவ்வாய்க்கிழமைகளில் மாலை 03.40 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயன்குளம், கரு நாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவணேஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நவம்பர் 25ஆம் தேதி அன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: டிசம்பர் இறுதிக்குள் மதுரை - போடி இடையே ரயில் சேவை - அதிகாரிகள் தகவல்!