மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இத்தொகுதியில் மூன்று லட்சத்து நான்காயிரத்து 478 வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு; வாக்குப்பதிவு தாமதம் - poll day
மதுரை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமதமானதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியின் திருநகர், கரடிப்பட்டி, தனக்கன்குளம் உள்ளிட்ட ஆறு வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செய்யப்பட்டு ஒரு மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்காளர்கள் வரிசையில் காத்து நின்று வாக்களித்துச் சென்றனர். மேலும், ஒரு மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியதால் ஒரு மணி நேரம் கூடுதலாக வாக்களிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.