தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் விஷ்ணு சிலை கண்டெடுப்பு! - மாநகராட்சி பணியாளர்கள்

மதுரை: மாநாகராட்சி அலுவலகம் அருகே விஷ்ணு சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷ்ணு சிலை

By

Published : May 4, 2019, 4:17 AM IST

மதுரை மாநகராட்சி எதிரே உள்ள மாவட்ட நீதிமன்றம் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான, மாநகராட்சியின் சுற்று சுவர்கள் இடிக்கப்பட்டு, புதிதாக சுவர் எழுப்பும் பணி நடைபெற்து வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை அச்சுவரின் அருகே மாநகராட்சி பணியார்கள் மண்ணை தோண்டியபோது, அங்கு சிலை ஒன்றை கண்டெடுத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாநாகராட்சி அலுவலகம் அருகே விஷ்ணு சிலை கண்டெடுப்பு

பின்னர், அதை ஆய்வு செய்தபோது விஷ்ணு சிலை என்று தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள் அந்த சிலையை கைப்பற்றினர். இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், "இது சாதாரண சிலை. ஒரு மரத்தடியில் வைக்கப்பட்டு திருநங்கைகள் வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் சரியான பராமரிப்பின்றி அது மண்ணில் புதைந்து இருக்கக்கூடும்" என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details