தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் கொழுக்கட்டை படையல் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே அமைந்திருக்கும் முக்குறுணி விநாயகருக்கு பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு பதினெட்டு படி பச்சரிசியில் இன்று கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.

மதுரை முக்குறுணி விநாயகர்
மதுரை முக்குறுணி விநாயகர்

By

Published : Sep 10, 2021, 4:41 PM IST

Updated : Sep 10, 2021, 4:48 PM IST

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் கோயிலின் வளாகத்தில் அமைந்துள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் கொழுக்கட்டை படைக்கப்படுவது வழக்கம்.

18 படி பச்சரிசியில் கொழுக்கட்டை படையல்

அதன்படி முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் வெல்லம், தேங்காய், கடலை, எள், ஏலக்காய், நெய் கலந்து கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு முக்குறுணி விநாயகர் சன்னதியில் கொழுக்கட்டை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நெய் வேத்தியம் நடைபெறும்.

முக்குறுணி விநாயகர்

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மதம் சார்ந்த விழாக்களுக்கு தமிழ்நாடு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பக்தர்கள் இன்றி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.

முக்குறுணி விநாயகர்

இதனை பக்தர்கள் வீட்டிலிருந்தே நேரலையில் காண மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அலுவலர்கள் மற்றும் பட்டாச்சாரியார் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:உச்சி பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல்!

Last Updated : Sep 10, 2021, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details