தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிக்கான பணி நியமனத்தை ரத்துசெய்யச்சொன்ன கலெக்டர் உத்தரவுக்கு இடைக்காலத்தடை! - மதுரை மாவட்ட செய்தி

மாற்றுத்திறனாளிக்கான கிராம உதவியாளர் பணி நியமனத்தை ரத்து செய்யப் போவதாக மாவட்ட ஆட்சியர் அனுப்பிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 21, 2023, 12:31 PM IST

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா பகுதியைச் சார்ந்த ஆனந்தகுமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ’60% மாற்று திறனாளியான நான் கடந்த டிசம்பர் 2022ஆம் ஆண்டு முத்தையாபுரம் ஊராட்சி எழுத்தாளருக்கு முறைப்படி விண்ணப்பித்து தேர்வு எழுதினேன். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டு கிராம உதவியாளராகப் பணிபுரிந்து வருகின்றேன். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் எனது பணி இன சுழற்சி முறை தவறானது எனக் கூறி பணியை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

எனவே, எனக்கு அனுப்பிய மாவட்ட ஆட்சியரின் நோட்டீஸிற்கு தடை விதித்து பணியினைத் தொடர உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜீ.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் பிற்படுத்தப்பட்டோருக்கான BC சிறப்பு மாற்றுத்திறனாளி பிரிவில் இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: மோசடி வழக்கில் வங்கி மேலாளருக்கு 7 ஆண்டுகள் சிறை: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

ஆனால் மாவட்ட ஆட்சியர் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்களுக்கான BCM இட ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தவறாக புரிந்து கொண்டு மனுதாரர் பணி நியமனத்தை ரத்து செய்ய முயற்சிக்கின்றனர்’ எனக் கூறினார். இதனைப் பதிவு செய்த நீதிபதி மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:கோவில் விழாவில் ஆபாச நடனம் ஆடினால் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு: உயர்நீதிமன்ற கிளை அதிரடி

ABOUT THE AUTHOR

...view details