தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விஜய் படத்தை பார்க்கக்கூடாது' - கண்டிஷன் போட்ட மதுரை ஆதீனத்தை கண்டித்த விஜய் ரசிகர்கள் - விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் படத்தை பார்க்கக்கூடாது என மதுரை ஆதீனம் தெரிவித்த நிலையில், அவரை கண்டித்து மதுரை முழுவதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

ஆதீனத்தை கண்டித்து போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்
ஆதீனத்தை கண்டித்து போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்

By

Published : Jun 9, 2022, 4:09 PM IST

மதுரை:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் நடித்த 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படத்தில் விநாயக கடவுளை கேலியாக பேசியதாகவும்; இதனால் நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை யாரும் பார்க்கக் கூடாது எனவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற துறவியர் மாநாட்டில் மதுரையின் 293ஆவது ஆதீனம் பேசினார்.

இந்தப்பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் பேச்சைக் கண்டித்து மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மதுரை மாநகர் முழுவதிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

அந்த சுவரொட்டிகளில் 'எச்சரிக்கை மதுரை ஆதீன மடத்தின் சொத்துகளை கொள்ளையடிக்கத் திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி தப்பா பேசலாமா?' என்ற கேள்வி வாசகங்களோடு, 'வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு சாதி, மதம் எதுவுமில்லை. தளபதி விஜய் மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை' என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனத்தின் பேச்சுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டிகளால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் ஏற்கெனவே அரசியல் ரீதியாகப்பேசிய கருத்துகள் பேசுபொருளாகிய நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் மதுரை ஆதீனம் இடையேயான சுவரொட்டி யுத்தம் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க:ஆடிப்போன மாவட்ட ஆட்சியர்.. என் பெயரிலேயே பண மோசடியா?

ABOUT THE AUTHOR

...view details