தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடங்குளம் அணு உலை - ரஷ்யாவிலிருந்து குழு வருகை - View of Kudankulam 3rd nuclear reactor

மதுரை: கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் மூன்றாவது அணு உலையை பார்வையிட ரஷ்யாவிலிருந்து 7 நபர்கள் கொண்ட நிபுணர் குழுவினர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

ரஷ்யாவிலிருந்து வந்த குழுவினர்
ரஷ்யாவிலிருந்து வந்த குழுவினர்

By

Published : May 20, 2020, 2:47 PM IST

மதுரை விமான நிலையத்திற்கு கூடங்குளம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மூன்றாவது அணு உலையை பார்வையிட ரஷ்ய விஞ்ஞானிகள் 7 பேர் கொண்ட குழு சிறப்பு விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் ரஷ்யாவிலிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் காலை 11.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தனர்.

ரஷ்யாவிலிருந்து வந்த குழுவினர்

பின்னர் தயாராக இருந்த மதுரை மாவட்ட மருத்துவ குழுவினர் ரஷ்ய விஞ்ஞானிகள் 7 நபர்களுக்கு மதுரை விமான நிலையத்திற்கு உள்ளேயே கரோனா பரிசோதனை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலைய அலுவலர்கள் அவர்களை வரவேற்று கார் மூலம் கூடங்குளத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: தேனியில் 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details