திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக நிதிநிலை அறிக்கை என்பது தமிழக குடிமகன்கள் மீதான கடன்சுமையை அதிகரித்துள்ளது. இதில் வேலைவாய்ப்பை வழங்குவது குறித்து அறிவிப்பு இல்லை.
பட்ஜெட் கடன் சுமையை அதிகரித்துள்ளது: கி.வீரமணி விமர்சனம் - தமிழக பட்ஜெட்
மதுரை: தமிழக நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) என்பது தமிழக குடிமகன்கள் மீதான கடன்சுமையை அதிகரித்துள்ளது என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார்.
மடியில் கணம் இருப்பவர்களை கூட்டணிக்கு அழைக்கிறது பாஜக, தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது. ஏனென்றால் பாஜக கட்சிக்கு காலே கிடையாது, பாஜக ஒரு மிஸ்டுகால் கட்சி. பா.ஜ.க-வினர் அதிமுக, பா.ம.க., தேமுதிக உடன் கூட்டணி வைப்பதை வரவேற்க வேண்டும். ஒரே பட்டனை அழுத்தி அழிக்க வேண்டியவர்களை அழிக்கும் வாய்ப்பு அது. தமிழகத்தில் பாஜகவோடு போட்டி என்பது நோட்டாவிற்கு மட்டும்தான். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதுதான் நாடாளுமன்ற தேர்தலின் நிலை.
பேராசிரியை நிர்மலாதேவியை 10 மாதங்களாக கைது செய்து வைத்திருப்பது மனித உரிமைக்கு எதிரானது. நிர்மலாதேவி யாரென்று எங்களுக்குத் தெரியாது. மனித உரிமை அடிப்படையில் ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் அவருக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. நிர்மலாதேவி விவகாரத்தில் பெரிய ஆட்களின் தொடர்பு இருப்பதால் மட்டுமே ஜாமின் மறுக்கப்படுகிறது என்றார்.