தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இந்துக்களை இழிவுபடுத்துவது போன்ற தோற்றத்தை சங்பரிவார் அமைப்புகள் ஏற்படுத்துகின்றன' - திருமாவளவன் - திருவள்ளுவர் சிலைக்கு காவி

திருவள்ளுவர் சிலைக்கு காவி உடுத்துவது, மாமன்னன் ராஜராஜ சோழனை இந்து என பேசுவது ஆபத்தானது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

thol thirumavalavan  vck  Rajaraja Cholan  Rajaraja Cholan as a Hindu  vck president  தொல் திருமாவளவன்  ராஜராஜ சோழன்  திருவள்ளுவர் சிலைக்கு காவி  திருமாவளவன் கண்டனம்
தொல் திருமாவளவன்

By

Published : Oct 7, 2022, 5:52 PM IST

மதுரை:சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார்.

அதில், 'தெலங்கானாவில் ராஷ்ட்ரிய சமிதியின் தேசிய கட்சி தொடக்கவிழாவில் கலந்துகொண்டேன். இதில் ஜனநாயக சக்திகள், மதவாத சக்திகளுக்கு எதிரான அணிகள் திரள நடைபெற்ற கூட்டமாகும். கர்நாடகத்திலிருந்து ஹெச்.டி.குமாரசுவாமி மற்றும் தேசிய அளவிலான விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மண்டல் கமிஷன் தலைவர் V.P. மண்டல், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கான்சிராம் ஆகியோருக்கு சிலை வைக்க கோரிக்கைவிடுத்தேன். வரும் 2024இல் நடைபெறும் நாடாளுமன்றத்தேர்தலில் அனைத்து ஜனநாயக சக்திகளும் வாக்குகளை சிதறாமல் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் துணை நிற்போம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 'எனது தலைமையில் நாளை 4 மணியளவில் பாஞ்சான்குளம் பகுதியில் சாதியக் கொடுமைகளைக் கண்டித்து ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது. பாஞ்சான்குளம், குறிஞ்சான்குளம் பகுதிகளில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் சாதியின் பெயரால் சமூக புறக்கணிப்பை நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும். 25 ஆண்டுகள் நடைபெற்ற சாதியக்கொடுமைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது. இதற்குத்தீர்வாக அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

கோவையில் நாளை நடைபெறும் எனது மணிவிழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகிறதோ அதே போல் பிற மாநிலங்களிலும் செயல்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “இன்றைய தமிழ்ச்சமுகத்தில் தமிழுக்கு மாற்றாக சமஸ்கிருதம் சில சக்திகளால் திணிக்கப்படுகிறது என்பதை இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார். திருவள்ளுவர் சிலைக்கு காவி உடுத்துவது, மாமன்னன் ராஜராஜன் சோழன் இந்து எனப்பேசப்படுவது ஆபத்தானது. சனாதானமான முறைகளை சமஸ்கிருதமாதலைக் கண்டித்தால், இது ஒட்டு மொத்த இந்துக்களை இழிவுபடுத்துவது போன்ற தோற்றத்தை சங்பரிவார் அமைப்புகள் ஏற்படுத்துகின்றன. இத்தகைய போக்கு வன்மையாக கண்டனத்திற்குரியது.

சிவகாசி பசுமை பட்டாசுகள் என்ற பெயரில் பட்டாசு தொழில்கள் முடக்கப்படுகின்றன. இதனால் தமிழ்நாட்டு மக்கள் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தும் தமிழ்நாடு அரசு அவர்களின் குறைகளைக் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுகிறேன்.

விசிக தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம்

ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுவது தவறு அல்லது வேறு எந்த விளையாட்டாக இருந்தாலும் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதால் தானே இன்றைக்கு தங்களையே மாய்த்துக்கொள்ளும் அவலங்கள் நடைபெறுகின்றன. அதை தடுப்பதற்கான முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு இளம்பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: எல்கேஜி யுகேஜிக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஏன்? - மக்கள் நீதி மய்யம் கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details