மதுரைமீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் (70) நேற்று அதிகாலை 4.50 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கருமுத்து கண்ணன் கோச்சடைப் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் மதுரை கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது. கருமுத்து கண்ணன் 15 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலராகவும், தியாகராஜர் கல்விக்குழுமத் தலைவராவும், தியாகராஜர், மீனாட்சி நூற்பாலைகளின் அதிபராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் கருமுத்து கண்ணனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அமமுக சார்பில் நிர்வாகிகள் இ.மகேந்திரன், டேவிட் அண்ணாத்துரை தலைமையில் அமமுகவினரும், கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள், ஆன்மீக தலைவர்கள், ஓதுவார்கள்,
இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், ஏராளமான தொழிலதிபர்கள், பேராசிரியர்கள், மாணாக்கர்கள், மீனாட்சியம்மன் கோயில் பக்தர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள், அனைத்து அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கருமுத்து கண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் 2ஆவது நாளான இன்றும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் மறைந்த கருமுத்து கண்ணன் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.