மதுரை: அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள கடச்சனேந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் நடிகர் ஹரி வைரவன். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.
இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மதுரை கடச்சனேந்தலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.
மருத்துவ சிகிச்சை மேற்கொண்டபோது அவருக்கு, நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நடிகர் சூரி உள்ளிட்ட திரைத்துறையைச் சார்ந்த பலர் உதவி செய்தனர்.