தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வள்ளலாரை மறுவாசிப்பு செய்ய வேண்டும்-மணியரசன்

மதுரை: சாதி மதமாக பிரிந்து கிடக்கும் தமிழர்களுக்கு வள்ளலாரின் அறம் சார்ந்த கருத்துக்களையும் அவரது சமூகப் பார்வையையையும் தமிழ் இன மொழி கண்ணோட்டத்துடன் நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டிய கடமை உள்ளது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் கூறியுள்ளார்.

மணியரசன்

By

Published : Feb 11, 2019, 12:06 PM IST

மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பாக அண்ணா முதன்மை வீதியில் நேற்று மாலை ஆறு மணிக்கு தமிழர் மறுமலர்ச்சி மூலவர் வள்ளலார் பெருவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில், சிறப்புரையாற்றிய அழகர் கோயில் கருட சித்தர், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அனைத்து உயிர்களுக்காகவும் கருணையோடு வள்ளலா

மணியரசன்
ர் பாடியதாக அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன், வாசலில் போடுகின்ற கோலத்தை கூட அரிசி மாவில் போடுவதன் மூலம் அவை சிற்றுயிர்களுக்கு உணவாகும் என்ற அடிப்படைப் பண்பு தமிழர்களுக்கு இருந்தது. அந்த வழியில் வந்தவர்தான் வள்ளலார். கடந்த 19ம் நூற்றாண்டில் வள்ளலார் ஏற்படுத்திய ஆன்மீகப் புரட்சி என்பது வெறுமனே ஆன்மீகம் சார்ந்தது அல்ல அவ்வாறு பார்ப்பது ஒரு சார்பு மனப் பார்வை. அவரது கருத்தியலில் சமூகம் பொருளாதாரம் தமிழர் அறம் போன்றவையே மேலோங்கி இருந்தன. வள்ளலாரின் இந்த ஆன்மீகப் புரட்சி என்பது சமூக சீர்திருத்தமாகவே நாம் பார்க்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும், கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் சமூகம் அறம் சார்ந்த வாழ்வியலை கடைப்பிடித்து வருகிறது. வள்ளலார் பாடிய பாடல்கள் அனைத்தும் இன்றைய காலத்திற்கும் பொருந்துவதாகவே படைத்துள்ளார். சாதி மதமாக பிரிந்து கிடக்கும் தமிழர்களுக்கு வள்ளலாரின் அறம் சார்ந்த கருத்துக்களையும் அவரது சமூகப் பார்வையையையும் தமிழ் இன மொழி கண்ணோட்டத்துடன் நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டும் அப்போதுதான் வள்ளலாரின் எண்ணமும் நோக்கமும் ஏதுவாக இருந்தது என்பதை உணர முடியும் எனக் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் ஆயத்தை சேர்ந்த அருணா தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் செ.ராசு விடியல் ஆனந்தன் கரிகாலன் உள்ளிட்டோர் உரையாற்றினர் மேரி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

கடமை உள்ளது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details