தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்நிலைய மரணங்கள் மிகவும் கண்டனத்திற்குரியது -  வைகோ!

மதுரை: மதுரையில் நடைபெற்ற காவல்நிலைய மரணங்கள் மிகவும் கண்டனத்திற்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ

By

Published : Jul 4, 2019, 12:03 AM IST

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதுரையில் கடந்த ஆறு மாதங்களுக்குள் நடைபெற்ற இரண்டு காவல் நிலைய மரணங்கள் மிகக் கண்டிக்கத்தக்கவை. மனித உரிமைகளுக்கு எதிரானது. பழங்கா நத்தத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞரை விசாரணை என்ற பெயரில் மதுரை காவல்துறை அழைத்துச்சென்று சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறது. இதுகுறித்து, அவரது பெற்றோர்களுக்குக் கூட காவல்துறை தெரியப் படுத்தாதது மிகக் கண்டனத்திற்குரியது. இதனை மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் வெளிக் கொண்டு வராவிட்டால் இந்த விஷயம் வெளியே தெரிந்து இருக்காது" என்றார்.

வைகோ

தொடர்ந்து பேசிய அவர், "இதுவரை எங்கும் நடக்காத கொடுமையாய் இரவோடு இரவாக உடற்கூறு ஆய்வு செய்தது கண்டிக்கத்தக்கது. உயிருக்கும் உடைமைக்கும் அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு உத்தரவாதம் தருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் சட்ட நடைமுறைகள் கிழித்தெறியப்பட்டன. உரிய நீதி விசாரணை நடைபெற வேண்டும். இதன் பின்னணியில் இருக்கும் உயர் அலுவலர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details