மதுரை விளாங்குடி டென்சிகாலனி பகுதியில் நாச்சியார் என்ற மூதாட்டி, தன் வீட்டின் அருகே உள்ள கடைக்கு நேற்று (ஞாயிற்றுகிழமை) மதியம் 3 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள், முகவரி கேட்பது போல் மூதாட்டியின்அருகில் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க நகையை அறுத்துகொண்டு தப்பியோடினர்.
மூதாட்டியிடம் பட்டபகலில் செயின் பறிப்பு: மதுரையில் அட்டகாசம்! - snacting
மதுரை: விளாங்குடி பகுதியில் மூதாட்டியிடம் பட்டப்பகலில் நகையை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்ற வாலிபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பட்டபகலில் செயின் பறிப்பு
இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் தலைக்கவசம் அணியாமல் துணிச்சலாக தங்களை அடையாளம் காணும் வகையில் எளிதாக பறித்துச் சென்ற காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இந்நிலையில், அந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து, கூடல்புதூர் காவல்துறையினர் இரு வாலிபர்களையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.