தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ற பெண்கள் கைது! - Two women selling bottles

மதுரை சோழவந்தான் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ற பெண்கள் இருவர் கைது
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ற பெண்கள் இருவர் கைது

By

Published : Nov 1, 2020, 8:03 PM IST

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலம் பேருந்து நிலைய பகுதியில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக விக்கிரமங்கலம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி காவலர்கள் மாறுவேடத்தில் சென்று விசாரணை செய்தபோது, மதுரை குளத்துப்பட்டியை சேர்ந்த சரசு என்ற மூதாட்டி மதுபாட்டில்களை பெட்டிக்கடைக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரியவந்தது. இதனை அடுத்து காவலர்கள் அவரை கைது செய்து அவரிடமிருந்து 61 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல காடுபட்டி பகுதியில் வடகாடுபட்டி பகுதியை சேர்ந்த அன்னலெட்சுமி என்ற பெண்ணும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். அவரை காடுபட்டி காவலர்கள் கைது செய்து அவரிடமிருந்து 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:சுடுகாட்டில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது - 1.250 கிலோ கஞ்சா பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details