மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சசிகுமார், பாலமுருகன், சந்தன கருப்பு, நவீன் சங்கர். நண்பர்களான இவர்கள் நால்வரும் அலங்கநல்லூர் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு, ஒரே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கொண்டையம்பட்டி பகுதியில் வந்தபோது சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மோதி நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சசிகுமார், பாலமுருகன் உயிரிழந்தனர்.