தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘திமுகவின் வெற்றிக்கு டிடிவி தினகரன் உதவியிருக்கிறார்’ - ராஜன் செல்லப்பா - su.venkatesan

மதுரை: சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா அளித்துள்ள பேட்டியில், டிடிவி தினகரன் திமுக வெற்றிக்கு உதவி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

rajan chellappa

By

Published : May 24, 2019, 10:15 PM IST

மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பா தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அதிமுகவுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது, ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் அதிமுக ஆட்சி தொடரும், ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சொன்னார், அதற்கான வாய்ப்பு இல்லை. திமுகவில் வெற்றிபெற்ற எம்.பி க்கள் மக்களுக்கு ஒன்றும் செய்ய போவதில்லை.

ராஜன் செல்லப்பா பேட்டி

அதிமுக தோல்வி குறித்து கவலை கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி என்ன தவறு செய்தது என தெரியவில்லை. மதுரை மக்களவைத் தொகுதியில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் வெற்றி கிடைத்து இருக்கும். சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துகள், அவர் நாடாளுமன்றத்தில் பேச மட்டுமே முடியும், திட்டங்களை அதிமுக மட்டுமே கொண்டு வர முடியும். சு.வெங்கடேசன் மக்களுக்காக கொண்டு வரக்கூடியத் திட்டங்களை தடுக்கக்கூடாது, கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்து மக்கள் சிறு தவறு செய்துள்ளார்கள். மதுரையில் தொழில் வளம் குறைந்ததற்கு கம்யூனிஸ்ட் கட்சி தான் காரணம். சு.வெங்கடேசன் மக்கள் பணியாற்ற வேண்டும், திமுக பெற்றுள்ள வெற்றி ஓர் மாயை, உண்மையான வெற்றி அதிமுகவுக்கு மட்டுமே. அதிமுகவில் தகுதி படைத்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது, எம்.பி சீட்டை நாங்கள் போராடி வாங்கவில்லை. அதிமுகவுக்குள் சில நேரங்களில் சலசலப்பு நடப்பது வாடிக்கையானதுதான்” என்றார்.

மேலும், தினகரன் அரசியல் வரலாறு முடிவுக்கு வந்துள்ளது என்றும், அவர் வசம் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிமுகவுக்கு திரும்ப வேண்டும் எனவும், தினகரன் திமுகவின் வெற்றிக்கு உதவி செய்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details