தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் டிரான்ஸ்ஃபார்மரைப் பிடித்து ராணுவ வீரர் தற்கொலை முயற்சி - தற்கொலைக்கு முயன்ற ராணுவ வீரர்

மதுரை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிரான்ஸ்ஃபார்மரைப் பிடித்து ராணுவ வீரர் தற்கொலை முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

transformer army man suicide
transformer army man suicide

By

Published : Jan 7, 2020, 5:35 PM IST

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மகன் சக்தி (25). தற்போது இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தேன் இஷா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு சக்தி ராணுவப் பணிக்காக திரும்பிச் சென்றுவிட்டார். இதற்கிடையே சக்தியின் உறவினர்கள் தேன் இஷாவை வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தியதாகவும், அதன் காரணமாக அவர் தற்கொலை முயன்றதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முயன்ற ராணுவ வீரர்

இதற்கிடையே மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேன் இஷா தற்கொலை தொடர்பாக விசாரணை இன்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக தனது உறவினர்களோடு சக்தியும் வந்திருந்தார்.

மனமுடைந்த நிலையிலிருந்த சக்தி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் திடீரென அருகிலுள்ள டிரான்ஸ்பார்மர் மேலேறி உயரழுத்த மின்சாரத்தைத் தொட்டு தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ள அவரை மீட்டு மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:

தொழிலதிபரிடம் 1 கோடியே 21 லட்சம் ரூபாய் மோசடி - இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details