மதுரை:மீலாடி நபியை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கால கடைசி நாளான நேற்று ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. பயணிகள் நீண்ட வரிசைகளில் நின்று பயணச்சீட்டுகள் பெற்றுச் சென்றனர். வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க விரும்பிய பயணிகள் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்களை பயன்படுத்தி விரைவாக பயணச்சீட்டு பெற்றனர்.
நேற்றைய தினம் இயந்திரங்கள் மூலம் பயணச் சீட்டு விற்பனை 50% அதிகரித்துள்ளது. நேற்று மதுரையில் இருந்து 4,691 பயணிகள், திருநெல்வேலியில் இருந்து 4,044 பயணிகள், திருச்செந்தூரில் இருந்து 2,514 பயணிகள், காரைக்குடியில் இருந்து 1,539 பயணிகள், திண்டுக்கல்லில் இருந்து 1,401 பயணிகள், கோவில்பட்டியில் இருந்து 1,254 பயணிகள், ராமநாதபுரத்தில் இருந்து 1,469 பயணிகள், செங்கோட்டையிலிருந்து 1,569 பயணிகள், ராஜபாளையத்தில் இருந்து 1,057 பயணிகள், விருதுநகரில் இருந்து 1,448 பயணிகள் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயண சீட்டு பெற்று பயணம் (Train travel ticket sales increase in Southern Railway) செய்துள்ளனர்.
இது போல அம்பாசமுத்திரம், மானாமதுரை, புதுக்கோட்டை, பழனி, பரமக்குடி, சங்கரன்கோவில், சாத்தூர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்தும் இயந்திரங்கள் மூலம் பயண சீட்டு பெற்று பயணிகள் பயணித்துள்ளனர். இது பற்றி ஈரோட்டைச் சேர்ந்த பயணி முத்து, 'இயந்திரம் மூலம் பயண சீட்டு பெறுவது மிகவும் எளிதாக உள்ளது' எனப் பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர், 'இயந்திரத்திரையில் நாம் செல்ல வேண்டிய ரயில் நிலையத்தின் பெயரை "வரைபடத்தை தேர்ந்தெடு" பகுதியை தொட்டோ அல்லது "இதர ரயில் நிலையங்கள்" பகுதியைத் தொட்டோ தேர்ந்தெடுக்கலாம்.