மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே போக்குவரத்து நெரிசல் எப்போதும் காணப்படும். ஆகையால் திருநகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தானாக முன்வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அதன் வழியாக மதுபோதையில் லோடு ஆட்டோ ஓட்டி வந்த சுப்ரமணி என்பவர் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த கணேசனுடன் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி உள்ளார்.