மதுரை மாவட்டம் மேலூர் அருகே குன்னாரம்பட்டியில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அங்குள்ள ராஜனேரி கண்மாய் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழையால் கடந்தாண்டு நிரம்பியது.
தற்போது கோடை காலம் தொடங்கி தண்ணீர் வற்றிய நிலையில் கண்மாயில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது.
கிராமப் பெரியவர்கள் முன்னிலையில் தொடர்ந்து கண்மாய் கரையில் தயாராக நின்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு சாதி, மத பேதமின்றி மீன்களைப் பிடிக்க இறங்கினர்.