தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 21, 2022, 10:35 PM IST

ETV Bharat / state

Track Alagar செயலி:'ஒரு லட்சம் பேர் டவுன்லோடு செய்து சாதனை' - மதுரை எஸ்.பி. தகவல்

சித்திரைத் திருவிழாவின் கள்ளழகர் இருக்குமிடத்தை அறிந்து கொள்வதற்காக மதுரை மாவட்ட காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட ’டிராக் அழகர்’ செயலியை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தரவிறக்கங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

’Track Alagar’ செயலி:’ஒரு லட்சம் பேர் தரவிறக்கி சாதனை’ - மதுரை எஸ்பி தகவல்
’Track Alagar’ செயலி:’ஒரு லட்சம் பேர் தரவிறக்கி சாதனை’ - மதுரை எஸ்பி தகவல்

மதுரை: மதுரை சித்திரைத்திருவிழாவில் கள்ளழகர் எங்கு வருகிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மாநகரக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ’டிராக் அழகர்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.

இந்தச் செயலியின் மூலமாக அழகர்கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் மீண்டும் அழகர் கோவில் திரும்புவது வரை எங்கு இருக்கிறார்..?, அந்தப் பகுதியில் போக்குவரத்து நிலவரம் எவ்வாறு உள்ளது..?, உள்ளிட்டப் பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதின் மூலம் இந்த ‘டிராக் அழகர்’ என்ற செயலி பல்வேறு தரப்பிலும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், அழகர் எதிர்சேவையன்று அக்குறிப்பிட்ட செயலி இயங்குவதில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அதற்குப்பிறகு ஒரு சில மணி நேரங்களில் அந்தக் கோளாறு சரி செய்யப்பட்டது. அக்குறிப்பிட்ட ’டிராக் அழகர்’ என்ற செயலி ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன்பு இளைஞர் படுகொலை - போலீசார் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details