மதுரை:காணாமல் போன தனது மகளை (சிறுமி) கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 20) மீண்டும் விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கு. விசாரித்த நீதிபதிகள், குழந்தை கடத்தல் விசாரணைக் காலத்தை நீட்டிக்கவிடாமல் அதற்குரிய விசாரணை மற்றும் நடவடிக்கைக்கு வேண்டிய அவசியம் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கில் நீதிபதிகள் சிறுமிகள் கடத்தப்படுவது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர். இதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து உரிய பதில் அறிக்கை தாக்கல் செய்து முறையான நடவடிக்கை எடுப்பதாகக் கூறி வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று (ஜூன் 20) விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், மதுரை, கோவை, திருவள்ளூர், வேலூர், தஞ்சை, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய 7 இடங்களில் இன்னும் 6 மாதங்களில் குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் நிலையமாக விரிவுபடுத்தப்படும் எனவும்; இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:கல்வி நிறுவனங்களில் 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளதா? - உயர்நீதிமன்றம் கேள்வி