மதுரை மாவட்டம் சமயநல்லூர் டபேதார் சந்தை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகன் நிருபன் சக்ரவர்த்தி(29). இவர் அப்பகுதியில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று அதிகாலை சமயநல்லூர் பகுதியில் நிருபன் சக்ரவர்த்தி சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த நிருபன் சக்ரவர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.