தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுதந்திர போராட்ட தியாகிக்கு பென்சன்: நீதிபதி உத்தரவு! - central government

மதுரை: 92 வயது சுதந்திர போராட்ட தியாகிக்கு மத்திய அரசு பென்சன் வழங்கி நடவடிக்கை எடுக்க நான்கு வாரங்கள் கெடு விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு பென்சன்: நீதிதி உத்தரவு!

By

Published : Jul 13, 2019, 11:45 AM IST

மதுரை புதூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். 92 வயதாகும் இவர், கடந்த 1942ஆம் ஆண்டு நாட்டின் விடுதலைக்கான வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர் ஆவார்.

இதற்காக கைது செய்யப்பட்டு தண்டனை பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கடந்த 1942 நவம்பர் 3 முதல் 1943 ஜூன் 10 வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தமிழக அரசின் பென்ஷன் பெற்று வரும் இவர், மத்திய அரசின் பென்ஷன் கேட்டு விண்ணப்பித்தார். இவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.

தன்னுடன் சிறையில் இருந்த இருவரின் சான்றிதழ் வழங்க வேண்டிய நிலையில் ஒருவரது சான்றிதழை மட்டுமே தாக்கல் செய்ததாகவும், மத்திய அரசின் பென்ஷன் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிந்துரைக்கவில்லை என்று கூறியும் இவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மத்திய அரசின் பென்ஷனை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், “சிறையில் இருந்ததற்கான இருவரின் சான்றிதழ்கள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் மனுதாரர், மாயாண்டி பாரதி என்பவரிடம் இருந்து மட்டுமே சான்றிதழ் பெற்று தாக்கல் செய்துள்ளார்.

அதேநேரம் தமிழக அரசும் பரிந்துரைக்கவில்லை. எனவே இவருக்கு மத்திய அரசின் பென்சன் வழங்க முடியாது" என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் கே.ரவிச்சந்திர பாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் ஏற்கனவே தமிழக அரசின் பென்ஷன் பெற்று வரும் நிலையில், இதை காரணமாகக் கொண்டே மத்திய அரசு பென்சன் வழங்க வேண்டும்" என தனி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் தேவையில்லாத காரணங்களைக் கூறி மத்திய அரசு நிராகரிக்கிறது என கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், "தியாகி இராமலிங்கம் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதற்காக ஏற்கனவே தியாகி மாயாண்டி பாரதி சான்றளித்துள்ளார். மாநில அரசின் பென்சனை பெற்றுள்ளார். இதுவே போதுமானது எனவே தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தியாகி பென்சன் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை 4 வாரங்களுக்குள் நிறைவேற்ற மத்திய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details